June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய மாம்பழங்கள் இறக்குமதியை நேபாளம் நிறுத்தியது

1 min read

Nepal halts imports of Indian mangoes.

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தியா மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் அதன் தரம் குறைவதாக குற்றம்சாட்டி நேபாள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்த தடை, நேபாள விவசாயிகளை மாம்பழ சாகுபடிக்கு ஊக்குவிற்கும் முயற்சி என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த தடையால் நேபாளத்தில் மாம்பழ விலை கடுமையாக உயரும் என்ற கவலை எழுந்துள்ளது. அதே நேரம் ஏற்றுமதி குறைவதால் இந்திய சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த சில வாரங்கள் முன்பு ஜப்பான் அரசும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு முறையான பராமரிப்பின்மையை குற்றம்சாட்டி இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *