June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவை உளவு பார்க்க 6 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பாகிஸ்தான்

1 min read

Pakistan launches 6 satellites into space to spy on India.

10.6.2026
இந்தியாவை எந்நேரமும் கண்காணிக்க பாகிஸ்தான் 6 செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ 1961இல் தொடங்கப்பட்டது. அதுமுதல் இதுவரை அந்த நாடு மொத்தமாகவே வெறும் 9 செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தியிருந்தது.
ஆனால் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கடந்த 2025 ஜனவரி முதல் நடப்பு 2026 ஜூன் வரையிலான 6 மாத காலத்திற்குள் 6 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

இந்த 6 செயற்கைகோளும் புவி கண்காணிப்பு செயற்கைகோள்கள் ஆகும். பொதுவாக, செயற்கைக்கோள்கள் ஒட்டுமொத்த பூமியையும் படம் பிடிப்பதற்காகத் துருவங்களை சுற்றி வரும் சன் சின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் தான் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் பாகிஸ்தானின் புதிய செயற்கைக்கோள்கள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக இன்க்லைன்ட் ஆர்மிட்ஸ் எனப்படும் சாய்ந்த சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதை அமெரிக்க விண்வெளி காம்ஸ்பாக் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் இன்க்லைன்ட் ஆர்மிட்ஸ் சுற்றுப்பாதையின் மூலம், அந்தச் செயற்கைக்கோள்கள் உலகைச் சுற்றாமல், இந்திய நிலப்பரப்பிற்கு மேல் மட்டுமே தொடர்ச்சியாக சுற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவின் எந்தவொரு முக்கியப் பகுதியையும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த செயற்கைகோள்கள் மூலம் பாகிஸ்தானால் படம் பிடித்துக் கண்காணிக்க முடியும்.
இதன் மூலம் எல்லையில் இந்திய ராணுவ நடமாட்டங்களை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தச் செயற்கைக்கோள்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளதால் புகைப்படங்களை நொடிகளில் பகுப்பாய்வு செய்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனுப்ப முடியும்.
பாகிஸ்தானின் இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் சீனாவின் விண்வெளி ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.
வேளாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மைக்காகவே இந்தச் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டதாகப் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாகக் கூறினாலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ உளவு திட்டத்தின் ஒரு பகுதியவே இது பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *