June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் வரிசையில் நின்று தரிசனம்

1 min read

Minister Ramesh stands in the queue and offers prayers at the Madurai Meenakshi Amman Temple

11.6.2026
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களோடு வரிசையில் நின்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக நடந்து வரும் திருப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் எல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்பதை இன்று ஆய்வு செய்தேன்.
திட்டமிட்ட தேதியில், திட்டமிட்ட நேரத்தில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதால் தான் இன்றைக்கு ஆய்விற்கு வந்திருக்கிறோம். ஏறத்தாழ 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. இன்னும் பத்து சதவீத பணிகள் மட்டும் பாக்கியிருக்கிறது. அதுவும் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *