ஹார்முஸ் ஜலசந்தியில் தமிழக மாலுமி உயிரிழப்பு
1 min read
Tamil Nadu sailor dies in Strait of Hormuz
14/6/2026
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய கப்பல் ஒன்றில் இருந்த தமிழக மாலுமி ஒருவர், உடல் நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரான் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. உலக நாடுகளின் பல்வேறு கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவை சேர்ந்த 13 கப்பல்கள் செல்லும் வழியின்றி சிக்கி தவிக்கின்றன.
இந்த கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் 107 நாட்களாக இருக்கின்றனர். அதில் எம்.டி. செலிஷ்டியல் என்ற கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த நிஷாந்த் நாதன், (வயது 35), என்பவர் 2ம் நிலை அதிகாரியாக பணியாற்றினார். உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 11ம் தேதி சிகிச்சை கிடைக்காமல் கப்பலில் உயிரிழந்தார்.
இந்த தகவலை, சக மாலுமிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகமும் உறுதிபடுத்தி உள்ளது. உடலை கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளதாக தூதரகம் தமது பதிவில் தெரிவித்துள்ளது.