நொய்டா விமான நிலைய சேவைகள் தொடங்கியது
1 min read
Noida Airport services have commenced.
15.6.2026
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி கடந்த மார்ச் 28ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையம் தனது முதல் வணிகரீதியான உள்நாட்டு விமானச் சேவைகளை இன்று தொடங்கியுள்ளது.
இந்த விமான நிலையத்திற்காக தங்களது விளைநிலங்களை வழங்கிய ஜேவார் பகுதியைச் சேர்ந்த 170 உள்ளூர் விவசாயிகள் இந்த முதல் விமானத்தில் பயணிகளாக லக்னோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்டமாக, நாட்டின் 16 க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானச் சேவைகளை வழங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள், நொய்டா விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.