June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டருடன் சந்திப்பு

1 min read

Tenkasi District Panchayat Council Presidents meet the Collector.

18.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங்கை தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர். கோவிந்தப் பேரி டி.கே பாண்டியன், பொருளாளர் முகமது உசேன் செயலாளர் பூமிநாத் ஆகியோர் நேரில் சந்தித்து கடையம் பகுதியில் உள்ள ராம நதிஅணைக்கட்டில் குடிநீர்க்காக 20 சிசிதண்ணீரை திறந்து விட வேண்டும். என்ற கோரிக்கையும் விவசாயம் செய்வதற்கு அதிகமான தண்ணீர் திறந்து விட வேண்டும். . என்ற கோரிக்கை யையும்

மேலும் 1400 வீடுகளுக்கு மேல் தரைத்தளம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் ஒரு பில் வரவில்லை. அந்தரூபாயையும் பயனாளிகளுக்கு உடனடியாக 221 பஞ்சாயத்தில் உள்ள 1400 க்கும் மேற்பட்ட வருக்கு வழங்க வேண்டும் ஒன்றாவது கணக்கில் பணமே இல்லாத 20 ஆயிரத்திற்கும் கீழுள்ள பஞ்சாயத்துக்களை ஆய்வு செய்து சுமார் 31 பஞ்சாயத்து இருப்பதாக தெரிகிறது.

அவர்களுக்கு சிறப்பு நிதியிலிருந்து பணம் வழங்க வேண்டும் நூறு நாட்களான ஊராட்சி மன்ற தலைவரின் பதவி காலம் அக்டோபர் 21 ல் முடிந்தாலும் செப்டம்பர் மாதமே அதனுடைய வேலைகள் எல்லாம் முடிவடையும் தருவாயில் பதவியின் அதிகாரம் இருப்பதால் உடனடியாக அவர்களுடைய வேலைகளுக்கு உரிய அனுமதி தாமதம் இன்றி வழங்க வேண்டும். ஊராட்சி மன்றங்களில் குடிநீர் இணைப்பில் மோட்டாரை பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுப்பவர்களை நிர்வாகம் கண்டுபிடித்து அந்த மோட்டாரை பறிமுதல் செய்வதற்கு போதிய ஊராட்சி மன்றத்தில் ஆள்கள் இல்லை ஒரு ஊராட்சியில் 150 க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் மோட்டார் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுவதால். அந்த மோட்டாரை பறிமுதல் செய்வதற்கு ஊராட்சி மன்றத்திற்கு சிறப்பு காவல்துறையை நியமிக்க வேண்டும் ஆகவே காவல் துறையை எங்களது உதவிக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகளையும் புதிய மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்தக் கருத்துக்களை எல்லாம். கேட்டு உரிய விசாரணை செய்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *