தென்காசி அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை
1 min read
Lorry driver hacked to death near Tenkasi
18.6.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியில் லாரி டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடைய நல்லூர் அருகே உள்ள கரடிகுளம் இந்திரா காலனியை சேர்ந்த ராமையா என்பவரது மகன் மாரிமுத்து (வயது 34). லாரி டிரைவரான இவர் கடந்த 11ம் தேதி இரவு கரடிகுளம்- பொய்கை சாலையில் பைக்கில் சென்றபோது கருப்பன் கோயில் முன்பாக மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த தென்காசி ஏடி எஸ்பி சங்கர், புளியங்குடி டி.எஸ். பி. மதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஷ்ட எஸ்ஐக்கள் சம்சுதீன், அலெக்ஸ் மற்றும் போவ சார்,உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து தென்காசி எஸ் அசோக்குமார் பிறப்பித்த உத்தரவின்பேரில் கடை நல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புளியங்குடி இன் பெக்டர் ஷியாம்சுந்தர், சேர்ந்தமரம் இன்ஸ்பெக்ட அருள்சாம்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லாரி டிரைவர் மாரிமுத்து அவரது உறவினர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கரடிகுளம் இந்திரா காலனியை சேர்ந்த கருத்பாண்டி என்பவரது மகன் முருகன் (வயது 22), பழனிசாமி என்பவரது மகன்
ரமேஷ் (வயது 21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்
போது கொலை செய்தது கடையநல்லூர் அம்பேத்கர்
தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஜோதிமணி (வயது 19), கடையநல்லூர் அடுத்த வலசை கிராமம் முப்புடாதி
அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரது
மகன் மகாபிரபு (வயது25) எனத் தெரியவந்தது.
இதையடுத்து ஜோதி மணியை தவிர மகாபிரபு உள்ளிட்ட
3 பேரை கைது செய்த போலீசார், ஜோதிமணியை
தேடி வந்தனர். இந்நிலையில் அவரை தனிப்படை
இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார்
நேற்று முன்தினம் இரவு வலசையில் உள்ள ஒரு
தோப்பில் வைத்து கைது செய்தனர்.