June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தாம்பரம்- வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

1 min read

Tambaram-Velachery Road named after Major Mukund Varadarajan

24.6.2026
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது உயிரிழந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்ட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மரணத்திற்கு பிறகு இந்திய அரசின் அமைதிக்கான உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவரான மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்ட வேண்டுமென இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதனை பரிசீலனை செய்த முதல்வர் விஜய், அந்த சாலைக்கு, அந்த சாலைக்கு தமிழில் ” மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனவும், ஆங்கிலத்தில் ” MAAAJOR MUKUND VARADARAJAN SALAI” என பெயர் சூட்டுவதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜன், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனந்தபுரத்தை சேர்ந்தவர். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து ராணுவத்தில் பணியாற்றி பணியின் போது வீரமரணம் அடைந்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *