June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

1 min read

81,000 devotees offered prayers at the Tirupati temple in a single day.

27.6.2026
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமலையில் வெள்ளி அன்று மொத்தம் 81 ஆயிரத்து 340 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3.76 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 44 ஆயிரத்து 874 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். லட்டு விற்பனை 4.42 லட்சமாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 3.31 லட்சமாகவும் பதிவாகியுள்ளது. மருத்துவ சேவைகளை 3,916 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பக்தர்கள் கூட்டநிலை காரணமாக, சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எஸ்.எஸ்.டி.டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *