சிங்கப்பூரில் எ.வ. வேலு சிகிச்சை – விசாரணைக்கு ஆஜராகவில்லை
1 min read
E.V. Velu undergoing treatment in Singapore – Did not appear for inquiry.
3/7/2026
சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு எ.வ. வேலு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் எ.வ. வேலு இன்று ஆஜராகவில்லை.
அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
எ.வ. வேலு சிங்கப்பூர் சென்ற நிலையில் அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். அவர் மேலும் சில நாள்கள் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவால் எ.வ.வேலு இன்று நேரில் ஆஜராக முடியாது என்றும் வேறு ஒரு நாளில அவர் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழக்கறிஞர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.