July 3, 2026

Seithi Saral

Tamil News Channel

7-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த குறைதீர் கூட்டம்

1 min read

Grievance redressal meeting regarding students’ higher education in Tenkasi district on the 7th.

3.7.2026
தென்காசி மாவட்டத்தில் வரும் 07.07.2026 அன்று 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது .

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை 100% கல்லூரிகளில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ள மற்றும் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த குறைதீர் கூட்டம் 07.07.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.00 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் இரண்டு பெற்றோரையும் இழந்த மாணவர்கள், ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள். மாற்றுத் திறனுடைய பெற்றோரின் குழந்தைகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இன மாணவ மாணவியர் மற்றும் உயர்கல்வி சேர்க்கை சார்ந்து இதர தேவைகள் உடைய மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

கல்லூரிக்கு விண்ணப்பித்தல், வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, கல்வி தொடர்பான சான்றிதழ்கள் பெறுதல் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *