தாம்பரம் – கொல்லம் ரெயில் பாம்பக்கோவில் சந்தையில் நிற்கும்
1 min read
The Tambaram–Kollam train will halt at Pambakovil Shandy.
3.7.2026
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி , கடந்த ஜூன் 15 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து அளித்திருந்த மனுவின் அடிப்படையில், 16101/16102 தாம்பரம் – கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விற்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், பாம்புக்கோவில் சந்தி ரயில் நிலையத்தில் 16101/16102 தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை முன்வைத்தபோது, பாம்புக்கோவில் சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் பயன்பெறுவதுடன், தமிழகத்தின் எலுமிச்சை தலைநகராக விளங்கும் இப்பகுதியின் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் நிறுத்தம் பெரும் உதவியாக அமையும் என்பதை ஆனந்தன் அய்யாசாமி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நீண்டகால மக்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு, தென்காசி மாவட்ட மக்கள் சார்பிலும், பாஜக சார்பிலும் ஆனந்தன் அய்யாசாமி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக முன்வைக்கப்பட்டுள்ள மற்ற கோரிக்கைகளும் இதேபோல் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.