தென்காசி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு
1 min read
Deadline extended for student admission to Industrial Training Institutes in Tenkasi district.
3/7/2026
தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் குருக்கள்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2028-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக (https://skilltraining.tn.gov.in/detitiadm) 3107.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துநர், காற்றாலைதொழில் நுட்பவியலாளர் மற்றும் ஓராண்டு Pump Operator cum mechanic (பம்ப் மெக்கானிக்) IOT Technician Smart Agriculture (நவீன வேளாண்மை) (SCVT) மற்றும் 6 மாதம் தொழிற்பிரிவான Drone Pilot (Junior) டிரோன்பைலட் (இளநிலை)) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
மேலும், தொழிற்நுட்பமையம் 4.0 திட்டத்தின்கீழ், ஈராண்டு தொழிற்பிரிவுகளான Advanced CNC Machining Technician NCVT (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர்) Mechanic Electric Vehicle NCVT (கம்மியர் மின்சார வாகனம்) மற்றும் ஓராண்டு @m Industrial Robotics and Digital Manufacturing Technician – NCVT (தொழிற்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பவல்லுநர்), Manufacturing Process Control and Automation (உற்பத்தி செயல்முறை கட்டுப்பாட்டு மற்றும் தானியங்கி) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 10-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தென்காசி. கடையநல்லூர், வீரகேரளம்புதூர் குருக்கள்பட்டி மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் அணுகவும். பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம்ரூ.750/- விலையில்லா மடிக்கணினி (Laptop) மிதிவண்டி, சீருடைகள் தையல்கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தககங்கள், வரைபடகருவிகள், பஸ்பாஸ். சலுகைகட்டண ரெயில்பாஸ், ஆகியன வழங்கப்படும். மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதிவசதி ண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: தென்காசி 9499055797, கடையநல்லூர்-04633-290270 9499055801, 9499055796, வீரகேரளம்புதூர் 04633-210962, 9944055798, 9487986493, 5 மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்-04633-298088 9499055800 -9488728415
மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தென்காசி ஆகிய முகவரிகளில் நேரில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்.