July 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஆனார்

1 min read

A girl who used to herd goats in Erode became a District Collector in the state of Maharashtra.

5.7.2026
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் வான்மதி. அவரது தந்தை ஒரு ஓட்டுநர். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக, அவர் காலையில் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து வந்தார். மாலை பள்ளி முடிந்ததும், மற்ற குழந்தைகளுடன் விளையாட செல்லாமல், தனது குடும்ப ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே அந்த பகுதியில் படித்து வந்தார்.
வழக்கம் போல பள்ளி படிப்பை முடித்தவுடன், வான்மதியின் திருமணம் குறித்து குடும்பத்தினர் பேச தொடங்கினர். ஆனாலும், அவரது குடும்பத்தாரின் உறுதுணையோடு, தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டம் பெற்றார். இதோடு நிறுத்தாமல், தனது கனவான கலெக்டர் படிப்பிற்காக தீவிரமாக தயாராக தொடங்கினார்.
ஆடு, மாடு மேய்த்து கொண்டே படித்து, இன்று ஒரு மாவட்டத்தின் கலெக்டராக உயர்ந்திருக்கும் வான்மதியின் இந்த சாதனை பயணம், தடைகளை உடைத்து சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த உத்வேகமாகும். தற்போது மராட்டிய மாநிலம் வர்தா மாவட்ட கலெக்டராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *