முத்துமாலைபுரம் சோகோ சார்பில் மாணவர்களுக்கு புத்தக பை
1 min read
Book bag for students on behalf of Muthumalaipuram Soco
5.7.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள
முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பக மாணவர்களுக்கு ஸோஹோ நிறுவனம் சார்பில் புத்தகப்பை வழங்கப்பட்டது.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் அவர் வசித்த குடும்ப வீடானது கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சார்பில் இலவச புத்தகப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சேகர், லோட்டஸ் முருகன் அழகர், ஜீவா, குருசாமிகள் சீனிவாசன், முருகேசன் மற்றும் ராமகிருஷ்ணன், முப்புடாதி முத்து மற்றும் படிப்பக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.