பண்ருட்டி அருகே விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி
1 min read
Four people, including three women, killed in an accident near Panruti.
5.7.2026
பண்ருட்டி அருகே நடந்த விபத்தில் சவுக்கு நாற்று நடுவதற்கான பணிக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை ஆயிப்பேட்டை சத்திரம் கிராமங்களிலிருந்து சவுக்கு நடவு பணிக்காக 10 க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஒரு டாட்டா ஏசி வாகனத்தில் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காடாம்புலியூர் சாலையில் பணிக்கன்குப்பம் அருகே சென்றபோது முன்னால் விறகு கட்டை ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது அந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வாகன ஓட்டுநர் உள்பட 11பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காடாம்புலியூர் போலீசார் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் சம்பவ இடத்தில் இறந்தவர்கள் வெங்கடாம்பேட்டை சேர்ந்த ராணி (60) ஆயிப்பேட்டை சேர்ந்த ரவி(60) என்பது தெரியவந்தது.
காயம் அடைந்த கணவன் மனைவியான சதீஷ்-சத்யா மற்றும் சந்தோஷ் அஞ்சலை காந்திமதி உள்பட 10 பேர் சிகிச்சைக்காக கடலூர் அனுமதிக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆயிப்பேட்டை சேர்ந்த காந்திமதி, சத்யா ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.