July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கடையநல்லூர் எம்எல்ஏ ஆய்வு.

1 min read

Kadayanallur MLA inspects Sengottai railway station.

6.7.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகிறார். மேலும் கடையநல்லூர் செங்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் அலுவலகம் அமைத்து பொதுமக்களின் குறைகளையும் கேட்டு வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நேற்று ரயில் பயணிகள் நல சங்கத்தின் நிர்வாகிகளுடன் சென்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திருமலாபுரம் திமு இராசேந்திரன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

மேலும் அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடம் குறைகள் எதுவும் இருக்கிறதா? என்பதை கேட்டறிந்து கொண்டார். அப்போது சில பயணிகள் கூடுதல் ரயில்கள் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் 5,6 ஆகிய இரண்டு புதிய பாதைகள் 8 கோடி மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன அதனையும் அவர் ஆய்வு செய்து 7, 8 ஆகிய கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் லிப்ட் வசதி ஏற்படுத்தவும் இது தொடர்பாக பொது மேலாளரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் வழங்கும் கவுண்டர் மூடி கிடப்பது குறித்து அங்கு பணியில் இருந்த பணியாளர்களிடம் விவரம் கேட்டு அறிந்தார் பழுதான இயந்திரத்தினை உடனடியாக சீரமைக்கவும் அவர் கேட்டுக்கொண்டார் சட்டமன்ற உறுப்பினரின் ரயில் நிலைய ஆய்வு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை முன்னாள் நகர் மன்றத்அ தலைவரும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியராஜா, செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ராமன், மற்றும் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *