July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி,செங்கோட்டை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்

1 min read

Official advises farmers in Tenkasi and Sengottai to opt for crop insurance

6.7.2026
தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் இயற்கை சீற்றங்களான புயல் வெள்ளம் அதிகமான மழை வறட்சி ஆகிய வற்றால் வேளாண்மை பெருமக்களின் பயிர்களை பாதுகாப்பு செய்திட பயிர் காப்பீடு செய்யுமாறு தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்துள்ளார் .

தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்களில் அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் நெல் உளுந்து நிலக்கடலை சோளம் வாழை வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு காரீப் பருவத்தில் காப்பீடு செய்யலாம் நெல் பயிருக்கு காப்பீடு தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ 92008 பிரிமிய தொகை ரூ 745 கடைசி நாள் 31-07-2026 நிலக்கடலை காப்பீடு தொகை ரூ 65949 ஒரு ஹெக்டேருக்கு பிரிமிய தொகை ஏக்கருக்கு ரூ 534 கடைசி நாள் 31-07-2026 உளுந்து காப்பீடு தொகை ரூ 46289 ஒரு ஹெக்டேருக்கு பிரிமியத்தொகை ஏக்கருக்கு ரூ 374 கடைசி நாள் 31-07-2026 சோளம் காப்பீடு தொகை ரூ 36064 ஒரு ஹெக்டேருக்கு பிரிமிய தொகை ஏக்கருக்கு ரூ 292 கடைசி நாள் 15-07-2026 வாழை காப்பீடு தொகை 223535ஹெக்டேருக்கு பிரிமியதொகை ரூ 4525 ஏக்கருக்கு கடைசி நாள் 15-09-2026 வெங்காயம் காப்பீடு தொகை ரூ 103740 ஹெக்டேருக்கு பிரிமியத்தொகை ரூ 2100 கடைசி நாள் 32-08-2026 ஆகும் ஆகவே வேளாண் பெருமக்கள் தங்களின் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்ட மேற்கண்ட பயிர்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அருகிலி உள்ள இ சேவை மையங்களில் தங்களின் பட்டா அடங்கல் ஆதார் எண் வங்கி கணக்கு எண் கொண்டு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *