தென்காசியில் அண்ணாமலை அமைப்பினர் கூட்டம்.
1 min read
Meeting of Annamalai’s supporters in Tenkasi
6.7.2026
தென்காசி மங்கம்மாள் சாலையில் உள்ள எஸ்விகே கார்டனில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கரு.நாகராஜன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் அண்ணாமலை தலைமையை ஏற்று சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக ஆட்சி குறித்து 6 மாதத்திற்குப் பின்னர்தான் கூற முடியும். வீ தி லீடர்ஸ் அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகு அரசியல் கட்சியாக மாறும்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா எனத் தெரிய வில்லை. பல ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களின் ராஜினாமாவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
உள்ளாட்சித் தேர்தலில் வீ தி லீடர்ஸ் அமைப்பு போட்டியிடு வது குறித்து அமைப்பின் தலைவர் அண்ணாமலை முடிவு செய்வார். தேர்தலில் போட்டியிட வேண்டும்
என 78,000 உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆளும் கட்சி யைப் பொருத்தவரை நல்லதும் நடந்துள்ளது. தவறும் நடந்துள்ளது. அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் எப்போது கிடைக்கப்பெறும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எந்த ஆட்சியிலும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். 40 நாள்கள் தானே ஆகிறது. 6 மாத காலம் போகட்டும் என்றார் அவர்.
அப்போது, பொறுப்பாளர்கள் யோகா டவர் சேகர், ஆறுமுகம், அன்புராஜ், நாகராஜு, ராஜா, குலசேகர பாண்டியன், கந்தசாமி, செந்தில்குமார், பிரேம் குமார், முருகன், சித்ரா ஆறுமுகம் என்ற முருகேசன், ராஜசேகர பாண்டியன், முத்துக்குமரன், மாடசாமி என்ற சாமி, சு.முருகன், முத்துச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.