July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியரை சோதனை சாவடியில் தலைவிரித்தாடும் லஞ்சம் – கேரள பத்திரிகை அம்பலம்

1 min read

Rampant bribery at Puliyara check-post – Kerala newspaper exposes the issue.

6.7.2026
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் தினமும் இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் தரப்படுவதாக பல்வேறு ஆதாரங்களுடன் கேரள பத்திரிகைகள் அம்பலப்படுத்தி உள்ளன.

தென்காசி மாவட்டம் புளியரை ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லாரி ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படும் வீடியோ கேரளாவின் மாத்ருபூமி ஊடகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த செய்தியில், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிமவள லாரிகளில் இருந்து ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக சட்டவிரோத வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் கேரள ஊடகங்களில் முக்கியத்துவத்துடன் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுகுறித்து போதிய செய்திகள் வெளியாகவில்லை என்ற வருத்தத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புளியரை சோதனைச் சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்து, குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், போக்குவரத்துத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *