July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 659 கோரிக்கை மனுக்கள்

1 min read

Tenkasi: 659 grievance petitions received at the grievance redressal meeting.

6/7/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து 659 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா. பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 659 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் , பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவிபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *