July 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கச்சா எண்ணெய் விலை மீண்டும் ‘கிடுகிடு’ உயர்வு

1 min read

Crude oil prices surge sharply again.

9.7.2026
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர் ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்தது. அது மட்டுமின்றி வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகையும் பாதித்தது.

சுமார் 40 நாட்கள் தீவிர தாக்குதலுக்குப்பின் இருதரப்பும் தற் காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. பின்னர் பெரும் முட் டுக்கட்டைகளுக்குப்பின் கடந்த மாதம் 17-ந் தேதி ஈரான்-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலையடுத்து ஈரானுடனான தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து, இரண்டு வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தால் சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலை, புதன் அன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6.4 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 544 ரூபாய் (78.93 அமெரிக்க டாலர்) ஆக மாறியுள்ளது. அமெரிக்கா கச்சா எண்ணெய் ஆன டபிள்யூ.டி.ஐ. விலை 6.5 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 167-க்கு (74.99 டாலர்) ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *