ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
1 min read
Deer rescued alive after falling into a well in the Alangulam area.
9.7.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மான் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மான் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி மானை உயிருடன் மீட்டு முதலுதவி செய்து மானை பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பலமுறை போராடி கிணற்றுக்குள் விழுந்த மானை உயிருடன் மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையிலான தீயணைப்புத் மற்றும் மீட்புப் பணி வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.