ஜனநாயகன் படத்திற்கு ‘ ஏ’ சான்றிதழ்
1 min read
The Censor Board granted an ‘A’ certificate to the movie *Jananayagan*.
9.7.2026
முதல்வர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்திற்கு ‘ ஏ’ சான்றிதழ் தணிக்கை சான்றிதழ் வழங்கி உள்ளது.
முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜன., 9ம் தேதி படம் வெளியாக வேண்டியது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. இதனால் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் வழங்கப்பட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின. எனினும், தணிக்கை வாரியம் இப்போது தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை தயாரித்த வெங்கட் நாராயணன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.