பழையகுற்றாலம் சாலையில் 7 அடி நீளம் உள்ழ மலைப்பாம்பு
1 min read
A 7-foot-long python on the Old Courtallam road.
13.7.2026
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் சாலையில் கே.ஆர். ரிஷாட் எதிரில் தவ்ஹீத் பேகம் என்பவருக்கு சொந்தமான இயற்கை விவசாய பண்ணையில் தென்னை மரத்தின் அடியில் சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிய நிலையில் பதுங்கி இருந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக தென்காசி தீயணைப்பு மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த அலுவலர் போக்குவரத்து ஜெயப்பிரகாஷ் பாபு தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ரத்தினகுமார் மற்றும் வீரர்கள் சாமி,ஆறுமுகம்,அமல்ராஜ்,ஆல்பர்ட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவகமாக மலை பாம்பினை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலப்பாம்பினை பாதுகாப்புடன் கொண்டு சென்று குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர்.
இதைப்பார்த்த பொது மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.