July 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம் டெல்லியில் திறப்பு

1 min read

Co-optex showroom opened in Delhi.

13.7.2026
தலைநகர் டெல்லியில், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப் டெக்ஸ்) நவீனமயமாக்கப்பட்ட ‘புதுப்பாவு’ விற்பனையகம் இன்று மாலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா, டெல்லி வாழ் தமிழ் மக்கள் மற்றும் கைத்தறி பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கைத்தறி ரகங்களை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், புது டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள மாநில எம்போரியா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ‘புதுப்பாவு’ விற்பனையகம் இன்று (ஜூலை 13) திறந்து தமிழ்நாட்டின் பாரம்பரியக் கைத்தறி ரகங்களை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், புதுடெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள மாநில எம்போரியா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ‘புதுப்பாவு’ விற்பனையகம் இன்று (ஜூலை 13) திறந்து வைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *