July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் வந்த கேரள வியாபாரியை காரோடு கடத்திய 4 பேர் கைது

1 min read

Four people arrested for abducting a Kerala trader along with his car in Pavoorchatram.

13.7.2026
கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டம், அப்துல்ரகுமான் என்பவரின் மகன் முஸ்தபா (வயது 47), மாட்டு வியாபாரியான இவர் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் தனியார் சந்தையில் மாடுகளை வாங்கி செல்வார்.
இதேபோல் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் நவ்புல் (வயது 29) என்பவருடன் மாடு வாங்க பாவூர்சத்திரம்- மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டு சந்தைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் காருடன் கடத்திச் சென்றனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் கேரள போலீசுக்கு புகார் அளித்தார்.
இதுகுறித்து தெரிய வந்த பாவூர்சத்திரம் இன்ஸ் பெக்டர் வேல்கனி, எஸ்ஐ ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முஸ்தபா செய்துவரும் மாட்டு வியாபாரத்திற்கு பணம் கொடுத்து வாங்கிய வகையில் ஏற்கெனவே அவருக்கு அறிமுக மான மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் கருப்பையா (வயது 53) மற்றும் அவரது உறவினர்களான கார்த்திக் (வயது 27), முத்து ராமன் (வயது 39), ராமையா (வயது 53), டிரைவர் ராஜ் (வயது 29) உள்ளிட்ட 5 பேரும் கொடுத்த பணத்தை திருப்பி கொடுப் பது சம்பந்தமான பிரச்னை யில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கருப்பையா. முத்துராமன், ராமையா, டிரைவர் ராஜ் ஆகிய 4 பேரை கைதுசெய்த போலீசார், தப்பியோடிய கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *