தென்காசியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5.83 லட்சம் மோசடி-2 பேர் கைது
1 min read
Two arrested for Rs 5.83 lakh fraud under the pretext of securing jobs in Tenkasi.
13.7.2026
தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் அருகே உள்ள கருவந்தா கிழக்குத் தெருவை சேர்ந்த ஜெயசேகரன் என்பவரது மகன் செல்வதாஸ் (வயது 31) இவர் ஊத் துமலை அருகே அமைக்கப் பட்டுள்ள ஒரு தனியார் காற்றாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த் தைகள் கூறப்பட்டிருந்தன. அதனை நம்பி செல்வதாஸ் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
அதன் பின்னர், ஒரு பெண்ணின் பெயரில் மர்ம ஆசாமி செல்வதாசை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டு, தனியார் நிறுவ னத்தின் இணையதள லிங்கை அனுப்பினார். அதில் பதிவு செய்து, காயின் பிட்டிங் டாஸ்க் என்ற ஆன்லைன் வேலையை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்,
முதல் நாள் முதலீடு ஏதுமின்றி ஆன்லைனில் கொடுக்கப்பட்ட வேலையை செய்தவுடன் செல்வதாஸ் வங்கி கணக்கிற்கு ரூ.1,050 லாபமாக வந்தது. மீண்டும் ரூ.8 ஆயி ரத்தை செலுத்தி வேலை கிடைத்தது. இதை உண்மை என நம்பிய செல்வதாஸ், அதிக லாபம் பெற பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை அந்த மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கு களுக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பின்பு ஆன்லைன் கணக்கில் பல லட்சம் லாபம் வந்திருப்பதாக காட்டியதை எடுக்க முயன்றபோது, மேலும் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 650 செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என அவர்கள் நிபந்தனை விதித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செல் வதாஸ், நண்பர்களிடம் விசாரித்த போதுதான் ஆன் லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து ஏமாந்ததை உணர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து தென்காசி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவ தியை சேர்ந்த பாண்டிசெல் னவம் என்பவரின் மகன் சதீஷ்பாண்டியன் (வயது 30), ஆறுமுகம் என்பவரது மகன் இளையராஜா (வயது 32) ஆகிய 2 பேருக்கும் தொடர் பிருப்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து சதீஷ்பாண்டியன் மற்றும் இளையராஜா ஆகிய 2 பேரையும் கைதுசெய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்பே ரில் இருவரையும் சிறையில்
அடைத்தனர். மேலும் இதில் தொடர் புடைய மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்கும் முயற்சியில் தென்காசி சைபர் கிரைம் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.