July 14, 2026

Seithi Saral

Tamil News Channel

விகேபுரம் பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்-விவசாயம் பாதிப்பு

1 min read

Wild Boar Menace in VK-Puram Area – Agriculture Affected

13.7.2026
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விகே புரம், வேம்பையாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர்.

மலையடிவாரக் கிராமப் பகுதியான இங்கு. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மலையை விட்டு வெளியேறும் காட் டுப்பன்றிகள் கூட்டம் கூட் டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இரவு விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த இளம் வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தும், தூர்வாரியும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பன்றிகளின் இந்த தொடர் அட்டகாசத்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட
நிர்வாகமும், வனத்துறையும் உடனடியாகத் தலையிட்டு,
விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவரும் காட்டுப் பன்றிகளை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர வேலி அமைக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *