July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

1 min read

One killed after tourist van overturns in Kadayam.

13.7.2026
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் பாபநாசத்திற்கு வேனில் வந்தனர். அவர்கள் வந்த வேன் தென்காசி மாவட்டம் கடையம் அய்யம்பிள்ளை குளத்தின் அருகேயுள்ள திருப்பத்தில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து ரோட்டில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் வேனின் அடியில் சிக்கிக் கொண்ட சரவணன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த கடையம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களின் உதவியுடன் வேனிலிருந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் உதயகுமார் (வயது 39), கிருபாகரன் (வயது 48), ராஜேஷ்குமார் (வயது 40), தமிழரசன் (வயது 46), மகேஷ் (வயது 53) ஆகிய ஐந்து பேர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *