July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

குருவிகுளம் ஊராட்சியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பயிற்சி முகாம்.

1 min read

Free training camp organized by an NGO in Kuruvikulam Panchayat.

13.7.2026
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு குருவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகு நேரி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து மகா சிகரம் மகளிர் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஆரி ஒர்க் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த இலவச பயிற்சி முகாமிற்குதெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி குணசுந்தரி மகேந்திரன் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகர் மன்ற உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர தலைவருமான உமா சங்கர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த முகாமில் பயிற்சி ஆசிரியர்கள் திருமதி அனிதா திருமதி பானுமதி மற்றும் குரு லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை பயனாளிகளுக்கு எடுத்துரைத்தனர் தெற்கு குருவிகுளம் ஊராட்சி செயலர் ஞானமணி திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்து வத்தை விளக்கி பேசினார்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகா சிகரம் மகளிர் தொண்டு நிறுவனர் எஸ்.எம்.லட்சுமி செய்திருந்தார் முடிவில் ஊராட்சி மக்கள் நல பணியாளர் அரவிந்த் அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *