July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர்

1 min read

Steady flow of water in all the waterfalls at Courtallam.

13.7.2026
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து சீராக விழுவதால் சுற்றுலா
பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி சீசன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 தினங்கள் தண்ணீர் நன்றாக விழுந்தது. சாரலும் நன்றாக பெய்தது. ஜூன் 15ம் தேதிக்கு பிறகு சாரல் குறைந்து வெயில் காணப்பட்டது. சில தினங்கள் வெயிலின் தாக்கம் அதிக மாகவே இருந்தது.இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சில தினங்களாக நல்ல மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால்
குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம்
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை இல்லை இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழத் தொடங்கியது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும்
சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் ஆண்களும் பெண்களும் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட கருவிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப் படுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.இதனால் தென்காசி, குற்றாலம்,
செங்கோட்டை, பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *