சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து
1 min read
Modi congratulates the Indian team that won gold at the International Physics Olympiad.
13.7.2026
கொலம்பியாவில் நடைபெற்ற சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“கொலம்பியாவின் புகாரமங்காவில்(Bucaramanga) நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO) போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற கனிஷ்க் ஜெயின், ரித்தேஷ் ஆனந்த் பெண்டலே, ரிஷித் கார்க், ஷ்ரேஸ்த் சுரைய்யா மற்றும் ஸ்வரித் ஜோஷி ஆகியோரை கொண்ட இந்தியக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
அவர்களின் இந்த சாதனை, நமது இளைஞர் சக்தியின் எல்லையற்ற திறனையும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் பறைசாற்றும் மற்றொரு உதாரணமாகும். கடந்த பத்தாண்டுகளில், இந்தப் போட்டியின் பல்வேறு பதிப்புகளில் நமது மாணவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதும் பாராட்டத்தக்கதாகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.