தென்காசி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
1 min read
Monthly review meeting at the Tenkasi District SP office.
15.7.2026
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் கலந்து கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மற்றும் கனரக வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற விசாரனைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் ஆளிநர்கள் சிறப்பாக பணிபரிந்த காவல்துறை யினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.