தென்காசி: விவசாயிகள் நெல் பயிர்களைக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min read
Tenkasi: Collector advises farmers to insure paddy crops.
15/7/2026
தென்காசி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 4500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாராமல் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படாமல் தடுத்து அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடவும், உயர் தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்கவும் மிகவும் உதவியாக இருப்பது பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் ஆகும்.
ஜூன் – ஜூலை மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு வரும் நெல் பயிர்களை காப்பீடு செய்ய 3107.2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 1 ஏக்கர் நெல் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.745/- ஆகும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் விதைப்புச் சான்று பெற்று ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் பிரிமியம் செலுத்தி காப்பீடு பதிவு செய்யலாம். தென்காசி மாவட்டத்தில் நெல் பயிருக்கு நடப்பு கார் பருவத்தில் 75 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதியின் வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.