July 18, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 140 வது பிறந்தநாள் விழா

1 min read

Vanchinathan’s 140th Birth Anniversary Celebration in Sengottai

17.7.2026

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் 140வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா், தென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், செங்கோட்டை நகர மன்ற தலைவர் முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வைத்து சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதன் 140வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்யப்ட்டது

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினா் டாக்டர் கலைகதிரவன் செங்கோட்டை நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா் தியாகி வாஞ்சிநாதன் வாரிசுதரா் வாஞ்சிகோபாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலா் நவீன்பாண்டியன் மற்றும் செங்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராமர் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவா் ராஜீவ்காந்தி, நகர்மன்ற உறுப்பினா் முருகையா, நகர தொழிற்சங்க தலைவா் செல்வகணபதி, வட்டத்தலைவா் விமல்ராஜ் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் வாரிசுகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *