July 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

Tenkasi: Horticulture Department officials stage a protest.

17/7/2026

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் தொடர் கோரிக்கையான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம். இத்திட்டத்தினை விவசாயிகளின் கருதியும், களப்பணியாளர்களின் பணி சமநிலையற்ற தன்மையையும் அரசு கருத்தில் கொண்டு முழுமையாக ரத்து செய்ய வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரவேல், தங்கராஜ், திருமலைக்குமார் தலைமை வகித்தனர். டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் பாலு, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் முருகேஷ், சங்கீதா, சுபாஷினி, முனியசாமி, வைகுண்டசாமி முருகன், விஜயன் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்றனர்.முடிவில் கோவிந்தராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *