தென்காசி அருகே வாலிபர் வெட்டி படுகொலை
1 min read
Young man hacked to death near Tenkasi
17/7/2026
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் அடுத்த சடையப்பபுரம் பகுதியில் பம்பு செட்டில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த இளைஞரை மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓட்டிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் அடுத்த சடையப்பபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணகுமார் (வயது 23) பத்தாம் வகுப்பு படித்து விட்டு அப்பாவுக்கு துணையாக விவசாய பணிகளை மருகிறார். இவர்களுக்கு 20 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது. அப்பாவுக்கு துணையாக இரவு நேரத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பொழுது மர்ம கும்பல் மோட்டார் ரூமுக்குள் நுழைந்து சரவண குமாரை அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
முன்னதாக சங்கர் என்பவரை கொலை செய்வதற்காக சென்றபொழுது அவர் அங்கே இல்லாததால் அவரின் ஆட்டை வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வந்து வீசி தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.