தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி
1 min read
Cheran’s team wins South Indian Film Writers’ Association election.
19/7/2026
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் இயக்குநர் சேரன் அணி வெற்றி பெற்றதாக இன்று (ஜூலை 19) அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் நம்ம கே.பாக்யராஜ் அணிக்கும் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சென்னை வடபழனியில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று (ஜூலை 19) நடைபெற்றது.
இச்சங்கத்திற்கான தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் இன்று காலை (ஜூலை 19) தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இதில், இயக்குநர் சேரன் தலைமையிலான நம்ம கே.பாக்யராஜ் அணிக்கும் குகநாதன் தலைமையிலான திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன.
சங்கத்தில் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில், 483 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
மொத்தம் 21 பொறுப்புகளுக்கு நடந்த இந்த தேர்தலில், தபால் வாக்குகள் உள்பட 437 வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் சேரன் அணியினர் முன்னிலையில் இருந்தனர்.
தபால் வாக்குகளில் சேரன் அணி 12 வாக்குகளும் குகநாதன் அணியினர் 2 வாக்குகளும் பெற்றனர். இதனால் சேரன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.