ஜனாதிபதி முர்முவுக்கு மால்டோவாவில் உற்சாக வரவேற்பு
1 min read
President Murmu receives an enthusiastic welcome in Moldova.
20.7.2026
ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவா நாட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளான மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டு உள்ளார். பயணத்தின் முதல் கட்டமாக அவர், மால்டோவா சென்றார்.
தலைநகர் கிசினாவ் சென்ற அவரை, அந்நாட்டு துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான மிஹாய் பாப்சோய் விமான நிலையத்தில் வரவேற்றார். மால்டோவா அதிபர் மயா சந்துவை, ஜனாதிபதி முர்மு சந்தித்து பேசுகிறார்.
இருநாடுகள் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர். மால்டோவா பயணம் முடிந்த பின்னர், வடக்கு மாசிடோனியாவுக்கு ஜனாதிபதி முர்மு செல்ல இருக்கிறார்.
அவரின் பயணம் குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு அரசு முறை பயணம் செல்கிறார். பயணத்தின் முதல் கட்டமாக மால்டோவாவின் கிசினாவ் நகரை வந்தடைந்தார். சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, மால்டோவா துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் மிஹாய் பாப்சோய் வரவேற்றார்.
இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.