July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் 707 மனுக்கள்

1 min read

Tenkasi: 707 petitions received at the public grievances redressal meeting.

20.7.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா. பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 707 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்
பெற்றுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீராசாமி. தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழக மண்டல மேலாளர் வெங்கட லெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *