விகேபுரத்தில் சிறுவன் உட்பட 2 பேரை வெட்டிய இருவர்கைது
1 min read
Two arrested for hacking two people, including a boy, in VK Puram.
23.7.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விகேபுரத்தில் சிறுவன் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், விகேபுரம் சந்தன மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள ஓட்டல் கடை அருகே கடந்த 21ம்தேதி இரவு விகேபுரம் பகுதி யைச் சேர்ந்த சுபாஷ் (வயது 21), இசக்கிபாபு (வயது 19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் சுபாஷை அரிவாளால் தாக்க முயன்றனர். தாக்குதலில் இருந்து சுபாஷ் தப்பியோடிய நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற இசக்கிபாபு, 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் அரிவா ளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்
தாக்குதலில் காயமடைந்த இசக்கிபாபு, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக 16 வயது சிறுவனை பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கணேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், விகேபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசி டிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான தூத்துக்குடியைச் சேர்ந்த சாலின்ஜோ என்பவரது மகன் ஸ்வீ டன்ரீகோ(வயது 22), ராமஜெயம் என்பவரது மகன் ஹரிராம் (வயது 20) ஆகிய இருவரையும் கைது செய்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏற்கெனவே இவர்களுக்கு இடையே டாஸ்மாக் கடையில் வைத்து தகராறு ஏற்பட்டு அதன்படி முன்விரோதம் இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அரி வாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.