July 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ரூ 1. 08 கோடி செலவில் அம்பாள் தேர்

1 min read

The Ambal chariot is being prepared for the Tenkasi Kasi Viswanathar Temple.

23.7.2026
வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு பிரம்மாண்டமாக செய்யப்பட உள்ள அம்பாள் தேர் – ரூ. 1 கோடியே 8 லட்சம் ரூபாயை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருத்தளமான தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள இரண்டு தேர்களில் அம்பாள் தேரானது பயன்படுத்த முடியாத சூழலில் சிதலமடைந்து காணப்பட்டு வரும் நிலையில், அம்பாள் தேரினை புதியதாக செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் இந்த தேரினை செய்ய தேவையான முழு பணத்தையும் நன்கொடையாக அளிக்க உள்ள நிலையில், சுமார் 35 அடி உயரம் 11 அடி அகலம் கொண்ட இந்த தேரினை செய்ய தற்போது ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை முழுவதுமாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் வழங்க உள்ளார்.

இந்த நிலையில், இந்த தேரினை செய்யும் பணியானது வருகின்ற திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், அதற்கான இடத்தினை இன்றைய தினம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் பொன்னி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதியில் இந்த தேரானது செய்யப்பட உள்ள நிலையில், பணிகளை விரைவாக முடித்து விரைவில் தேரானது பயன்பாட்டிற்கு வரும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய தேரினை கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பாக காட்சிப்படுத்தவும் கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *