July 24, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கருடாழ்வார் ஜெயந்தி

1 min read

Garudalvar Jayanthi at the Keezhapavoor Krishnan Temple

24.7.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கருடாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது.

பாவூர்சத்திரம் அருகேஉள்ள கீழப்பாவூர் தமிழர் தெருவில் ஸ்ரீருக்குமணி மற்றும் சத்தியபாமா ஸ்ரீவேணு கோபால கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடி மாத சுவாதியையொட்டி கருடாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது.இதையொட்டி மாலையில் கருடாழ்வாருக்கு கும்ப ஜெபம், அபிசேகம், அலங்காரம் நடைபெற்றது.

இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் தீபம், எண்ணை தீபம், நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *