ஜனநாயகன் முதல்நாள் வசூல் ரூ.41 கோடி
1 min read
‘Jananayagan’ Day 1 collection: ₹41 crore.
24.7.2026
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.41 கோடி வசூலித்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன், உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழகத்தில் 1000 திரைகளிலும், இந்தியா முழுக்க 3,000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் வெளியாகியது. முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, டைட்டில் கார்டில் முதல்வர் தளபதி ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, முதல் நாளில் மட்டும் ரூ.41 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.36.50 கோடியும், தெலுங்கில் ரூ.2.75 கோடியும், ஹிந்தியில் ரூ.1.75 கோடியும் வசூலித்துள்ளது. அதேபோல, உலகளவில் ரூ.78.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
வாரஇறுதி நாட்கள் என்பதால் முதல் நாளை விட, அடுத்த இரு தினங்களில் அதிக வசூலை ஈட்டும் என்பதால், இத்திரைப்படம் மிக விரைவாக ரூ. 100 கோடி வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச தொகையை வசூலித்த படம் என்ற சாதனையை ஜனநாயகன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.