சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்
1 min read
Brahmadathan appointed as the new Thantri of Sabarimala.
25.7.2026
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.
இந்தநிலையில், சபரிமலையின் புதிய தந்திரியாக காந்தரரு பிரம்மதத்தனை திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலின் தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு ராஜீவருக்குப் பிறகு கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.