July 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி

1 min read

Attempt to besiege the Raj Bhavan by crossing the barricades.

26.7.2026
சென்னை பனகல் மாளிகை அருகே நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காக்ரோச் ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

சென்னை பாலன் இல்லத்தில் கடந்த ஒரு வார காலமாக, நீட் தேர்விற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்பினருடன் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இணைந்து, நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைப்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிதி நேரம் போக்குவரத்து இடஞ்சல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *