சங்கரன்கோவிலில் மாணவிகளுக்கு சலங்கை பூஜை
1 min read
Salangai Puja for female students in Sankarankovil
27.7.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பரணி நாட்டியாலயா பள்ளியின் சார்பில் பரதநாட்டிய பயிற்சி நடைபெற்றது. இதில் பரதநாட்டியம் பயின்ற மாணவிகளுக்கு ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் சலங்கை பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மவந்திக்கா ஸ்ரீ என்ற மாணவி குருவருள் தட்சனை, குருவை வணங்கி முடிந்த பின்பு சலங்கை பூஜை துவங்கியது தொடர்ந்து சலங்கை பூஜையில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருமே சிறப்பாக பரதநாட்டியம் ஆடி சலங்கை பூஜை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து கோவில் யானை கோமதியிடம் மவந்திகா ஸ்ரீ என்ற மாணவி குடும்பத்துடன் ஆசி பெற்றுச் சென்றனர்.