July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

கோழிக்கோட்டில் போதைப்பொருள் விற்ற ஆசிரியைகள் 3 பேர் கைது

1 min read

Three female teachers arrested for selling drugs in Kozhikode.

29.7.2026
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே உள்ள பேராம்பிரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரியும் 2 பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, கோழிக்கோடு மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், போதைப்பொருளுக்கு எதிராக கேரளா முழுவதும் நடத்தப்படும் ‘ஆபரேஷன் துபான்’ சிறப்பு திட்டத்தின் கீழ், பேராம்பிரா போலீசார் அந்த ஆசிரியர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

போலீசாரின் தீவிர கண்காணிப்பில், கோழிக்கோடு அருகே உள்ள மருதோம்கரா பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியைக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், அவர் அந்த பெரிய கும்பலுக்கு விசுவாசமான இடைத்தரகராக செயல்பட்டு, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியை கீர்த்தனா கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதிரவைக்கும் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
வங்கி கணக்கு மூலம் டீலிங்கைதான கீர்த்தனாவிடம் நடத்திய தீவிர விசாரணையில், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் காவியா என்ற பெண்ணுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களை தொடர்ந்து, இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நெட்வொர்க்கில் தொடர்புடைய குற்றோத்து பகுதியை சேர்ந்த நிஷ்மா (வயது 30) என்ற மற்றொரு ஆசிரியையையும் போலீசார் செவ்வாய் அன்று மடக்கிப் பிடித்தனர். இவரும் நேரடியாக போதைப்பொருளை விற்காமல், பணம் வாங்கியவுடன் ஆன்லைனில் லொகேஷன் அனுப்பி நூதன முறையில் போதைப்பொருள் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 3 பெண் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இன்னும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் அந்த கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *