சிவகிரி அருகே 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
1 min read
Mother commits suicide by self-immolation with two sons near Sivagiri.
6/10/ 2026
தென்காசி மாவட்டம், சிவகிரியில் குடும்ப பிரச்சனையில் தாய் இரண்டு குழந்தைகளுக்கும் மண்ணெண்ணய் ஊற்றி தானும் தீக்குளித்தார் . இதில் தாய் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இரண்டு ஆண் குழந்தைகளும் மருவத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி 18-வது வார்டு வடக்கு சத்திரம் மேலச்சரகம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரது மகன் காளிப்பாண்டி( வயது 28) இவர் கூலித் தொழிலாளி. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 25) என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கபி (வயது 6) ரபி (வயது 4) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கபி 1 ஆம் வகுப்பும் ரபி பால்வாடியிலும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு ஆண் குழந்தைகள் மீதும் தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இன்று காலையில் நெல்லை ஐகிரவுண்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.